'திராவிட மாடல் அல்ல; இது திருட்டு மாடல்!'
'இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதுதிராவிட மாடல் அல்ல; திருட்டு மாடல்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் சட்ட விரோத மணல் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கலெக்டர்கள், அமலாக்கத் துறை சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் வேலைகள் நடப்பதால், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க, அமலாக்கத் துறை கோரிய நிலையில், அதை ஏற்க நீதிபதிகள் மறுப்பதாக செய்தி வந்துள்ளது.
இனியும் இந்த அரசு, மணல் கடத்தல் விவகாரத்தில் வேஷம் போடுவது வெட்கக்கேடானது. ஆட்சியாளர்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவைகளாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது, இந்த உத்தரவு. இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பது கேவலமானது. இது திராவிட மாடல் அல்ல; திருட்டு மாடல்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து