Advertisement

நடிகருக்கு வலை வீசும் பன்னீர்செல்வம்


தேசிய தலைவர் பட நடிகரான ஜெ.எம்.பஷீர், ராமநாதபுரம், தேனி தொகுதிகளில் போட்டியிட விரும்பினார். தி.மு.க., சீட் தரவில்லை. நட்சத்திர பேச்சாளராக செல்ல தயார் என அறிவித்தும், தி.மு.க., கண்டுகொள்ளவில்லை.

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில், 161 மசூதிகளின் உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய குடும்பங்களுக்கு ரம்ஜான் நலத்திட்ட உதவிகளை, கட்சி சார்பின்றி வழங்கி வருகிறார். முக்குலத்தோர் சமூகத்தை அடுத்து இஸ்லாமியர்கள் ஓட்டு ராமநாதபுரத்தில், 2.5 லட்சத்திற்கு மேல் உள்ளது.

பஷீரை, அப்பகுதி மக்கள் தேவர் இனத்தை சேர்ந்தவராக பார்ப்பதாலும், இஸ்லாமியர்களும் இவரை பஷீர் தேவர் என்று அழைப்பதாலும், பன்னீர்செல்வம் அணி, பஷீருக்கு வலை வீசி வருகிறது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்