Advertisement

கச்சத்தீவு குறித்து பச்சை பொய் பேசுகின்றனர்: பழனிவேல் தியாகராஜன்

"நமக்கு வரவேண்டிய நிதியில் ஒரு காலத்தில் 1 ரூபாய் தந்தால் 35 பைசா வரும், தற்போது 29 பைசாவாக மாற்றிவிட்டதை பெருமையாக சொல்கிறார்கள்" என, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகம் கடந்த 3 ஆண்டுகளில் முன்னேறி உள்ளது. மக்களுக்காக நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் முதல்வன் திட்டமானது, 25 லட்சம் இளைஞர்களுக்கு பயனாக அமைந்துள்ளது,

மக்களைத் தேடி மருத்துவத்தின் வாயிலாக இலவச மருத்துவ சேவைகளை மக்கள் பெறுகின்றனர். இலவச பஸ் திட்டம் வாயிலாக பெண்களுக்கு மிகுந்த பலன் கிடைக்கிறது. 1.15 கோடி மகளிரின் வங்கிக்கணக்கில் மாதம் 1000 ரூபாய் செலுத்துப்படுகிறது.

ஆனால், மத்தியில் உள்ள ஆட்சி அனைத்து வகையிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நமக்கு வரவேண்டிய நிதியில் ஒரு காலத்தில் 1 ரூபாய் தந்தால் 35 பைசா வரும், தற்போது 29 பைசாவாக மாற்றிவிட்டதை பெருமையாக சொல்கிறார்கள்.

பேரிடர் வந்தால் ஒரு ரூபாய் தருவது கிடையாது, நம் வரிப் பணத்தை அவர்கள் வைத்துள்ளனர். நாங்கள் சொல்லும் திட்டத்தில் தான் நீங்கள் கல்வி பயில வேண்டும், நாங்கள் சொல்லும் நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவம் சொல்லித் தரவேண்டும் என்கின்றனர்.

சட்டசபையில் உருவாக்கும் எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல், ஒரு கொடூரமான கவர்னரை இங்கு திணித்துள்ளனர். இதையெல்லாம் மறைப்பதற்கு கச்சத்தீவை கையில் எடுத்து பச்சை பொய்களைப் பேசி புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.

பா.ஜ., ஆட்சி தொடர்ந்து நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து விடும். 10 ஆண்டுகளில் செய்யாததை அடுத்த 25 ஆண்டுகளில் செய்து முடிக்கிறேன் என பிரதமர் பேசுகிறார். 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் கீழ்நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்