Advertisement

நீட் விவகாரம் காங்கிரசுக்கு பா.ஜ., பதிலடி

'நீட் தேர்வுக்கு முன் மருத்துவக் கல்லுாரி படிப்புகளில் இடம்பெறும் தமிழ் வழி அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 600ஆக இருந்தது. அது நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பின் படிப்படியாக குறைந்து விட்டது' என, காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியுள்ளார்.

அவருக்கு பதிலடி கொடுத்து, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:

கடந்த 2005லிருந்து - -2015 வரையிலான 10 ஆண்டுகளில் மொத்தம் 213 அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்டனர். நீட் நுழைவுத் தேர்வு அமலுக்கு வந்த பின், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

அதையடுத்து, வருடத்திற்கு 500க்கும் அதிகமான, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லுாரிகளில் இணைந்துள்ளனர். இதற்கான ஆவணங்கள் அரசிடம் உள்ளன. மேலும், நீட் தேர்வுக்கு முன் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் மாணவர்கள் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்தனர்.

அதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழக மாணவர்கள் சேருகின்றன. ஆனால், தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காக ஜெய்ராம் ரமேஷ், உண்மையை மறைத்து தவறான தகவல் அளிக்கிறார். அது தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்