தமிழிசை சுய புராணம் கட்சியினர் அதிருப்தி
தென் சென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் தமிழிசை, சுய புராணம் பாடுவது, கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழிசை சவுந்தரராஜன், கடைசி நேரத்தில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி தலைமை உதவியுடன் 'சீட்' பெற்றார். வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, ''மக்களுக்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தேர்தலில் நிற்கிறேன். தென் சென்னை தொகுதியில், 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறேன். மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தெரியும். நான் வேட்பாளராக நிற்கவில்லை; வாக்காளராகவே தேர்தலில் நிற்கிறேன்,'' எனக் கூறி வருகிறார்.
இது, பா.ஜ., நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் கூறுகையில், 'கவர்னர் பதவியை ராஜினாமா செய்ததற்கு தங்களை காரணமாகக் கூறுவதை, மக்கள் ரசிக்கவில்லை. அவர் சுய புராணம் பாடுவதை நிறுத்திவிட்டு, பிரதமர் மோடியின் சாதனைகள், தொகுதியின் தேவைகளை எடுத்துக்கூறி ஓட்டு சேகரிக்க வேண்டும். இதை அவரிடம் வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.
வாசகர் கருத்து