கனிமொழி-தமிழிசை- திருமா: தேறுவரா... வீழ்வரா: தினமலர் மெகா சர்வே முடிவுகள்

- கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு - இணை ஆசிரியர்அண்மை காலத்தில், தமிழகம் இப்படி ஒரு தேர்தலை பார்க்கவில்லை. இரண்டு திராவிட கட்சிகளுக்கு இடையே தான் போட்டி என்ற நிலை மாறி, பல தொகுதிகளில் சுவாரசியமான மும்முனை போட்டி நிலவுகிறது. மக்கள் இதை எப்படி பார்க்கின்றனர்? இந்த மாற்றத்தை வரவேற்கின்றனரா? உள்ளிட்ட கேள்விகளோடு தேர்தல் அறிவிப்புக்கு பின், கருத்துக்கணிப்பு படிவங்களோடு அவர்களை சந்தித்தோம்.

எத்தனை பேரை சந்தித்தோம்? 88,000 பேரை சந்தித்தோம்!தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,- 40 லோக்சபா தொகுதிகள், 264 சட்டசபை தொகுதிகள், 3,000 பஞ்சாயத்துகள் என, நம் நாளிதழ் சார்பில் சுற்றித் திரிந்து கருத்துக்கணிப்பை நடத்தியது, ஜெ.வி.சி.ஸ்ரீராம் தலைமையிலான 'வின்னிங் எலக் ஷன்' கருத்துக்கணிப்பு குழு.

இந்த பணி அவர்களுக்கும் சரி, நம் நாளிதழ் ஆசிரியர் குழுவுக்கும் சரி, மிகவும் சவாலாக அமைந்தது. தேர்தல் அறிவிப்புக்கும், ஓட்டெடுப்புக்கும் ஒரு மாதத்திற்கும் சற்றே அதிகமான அவகாசம் மட்டுமே இருந்தது ஒரு காரணம். குறுகிய காலகட்டத்தில் அனைத்து இடங்களுக்கும் சென்று, ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்தாக வேண்டும்.

அவர்களில் ஒவ்வொருவரிடமும், 'நீங்கள் யாருக்கு ஓட்டுப்போடப் போகிறீர்கள்?' என்ற எளிமையான கேள்வி மட்டும் கேட்க வேண்டும் என்றால், பணி எளிதாக இருந்திருக்கும். ஆனால், ஒவ்வொருவரும் சொல்லும் பதிலுக்கு, காரண காரியம் என்ன? அவர்களின் பதிலுக்கும், அவர்கள் சிந்தை ஓட்டத்திற்கும் பொருத்தம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு நபரிடமும் 20 கேள்விகள் கேட்டோம். அவற்றுக்கு பொறுமையாக பதில் சொன்ன, 88,000 பேருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஏன் 88,000 பேர்?பணியை துவங்கும் போது, 40 தொகுதிகளுக்கும் தலா, 2,000 பேர் என்ற கணக்கில், 80,000 பேரை சந்திக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். ஆனால், கள நிலவரம், எங்கள் திட்டத்தை முழுதுமாக புரட்டிப் போட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதியிலும், 1,500 பேரிடம் கருத்து கேட்டு வரும்போதே, கள நிலவரம் மாறத் துவங்கியது.

கணிப்பு துவங்கியபோது, பரவலாக தி.மு.க., ஆதரவு நிலவிய இடங்களில், போகப்போக, பரவலான மாற்றம் ஏற்பட்டு, எதிர்தரப்பில் ஒரு கட்சிக்கு ஆதரவு என்று சூழல் மாறியது. அதாவது, அதே இடங்களில் ஒரு வாரம் முன்பிருந்த கருத்து, அடுத்த வாரம் இல்லை என்ற நிலை உருவானது. இதுதான் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது.

இதனால், சில தொகுதிகளில் மீண்டும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. சில தொகுதிகளில், கருத்துக்கணிப்பு நடந்த இடத்தை தவிர்த்து, வேறு இடங்களில் கூடுதல் நபர்களிடம் கருத்துக்கேட்டு, மாற்றத்தை உறுதி செய்ய வேண்டி இருந்தது. அனைத்திற்கும் மேலாக, கடைசிநேர குட்டி கருத்துக்கணிப்பு, அனைத்து தொகுதிகளிலும் நடத்த வேண்டி இருந்தது.

இந்த கட்டுரையை எழுதும் நேரத்தில் கூட, சில தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடியாத நிலையில் உள்ளது. அதனால், நம் நாளிதழின் கருத்துக்கணிப்பு தான் கடைசி வாரம் வரை நடத்தப்பட்ட, ஒரே மெகா கருத்துக்கணிப்பு என, ஐயமில்லாமல் சொல்லலாம்.

இப்போதும், கள நிலவரம், கடைசி இரண்டு நாட்களில், 3ல் இருந்து 5 சதவீதம் வரை மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகத்தான் எங்களுக்கு தெரிகிறது. இந்த மாற்றம் யாருக்கு லாபம் என்றும் சொல்ல முடியவில்லை. ஏனெனில், போட்டி அவ்வளவு கடுமையாக இருக்கிறது. இந்த தேர்தல், வலுவானோருக்கும், வேலை செய்வோருக்குமே வெற்றியை தரும்.

நேற்று(ஏப்.,15) 15 தொகுதிகளின் நிலவரம் தெரிவிக்கப்பட்டது. இன்று, 15 தொகுதிகள், நாளை 10 தொகுதிகள் என, பிரித்துப் பிரசுரிக்கப்படும். இது தொடர்பான விரிவான விவாதத்தை, எங்கள் 'யு டியூப்' சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பார்க்கலாம்.

இதெல்லாம் பெரும் பொருட்செலவில், மண்டை காயும் வேலையாக செய்யப்பட்டு இருந்தாலும், வாசகர்கள், இது வெறும் கணிப்பு தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் நெருங்கி கொண்டே இருக்கிறது. அந்த காலகட்டத்தில் சிறு மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த சிறு மாற்றமும் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் நிலையில் தான் சில தொகுதிகள் இருக்கின்றன.

சரி, கருத்துக்கணிப்பு சாராம்சமாக என்ன சொல்கிறது? இதற்கான பதில், படத்தில் சூசகமாக சொல்லப்பட்டு இருக்கிறது. .

இன்றைய ( ஏப்.16) 15 தொகுதிகள் விவரம் பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்specials.dinamalar.com/therthalkalam/?id=2

வீடியோவில் காணுங்கள்இன்றைய15 தொகுதிகள் குறித்த அலசல் சிறப்பு வீடியோவை காண கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்www.youtube.com/watch?v=S1BGP5wT2oM


Krishnamurthy Venkatesan - Chennai, இந்தியா
16-ஏப்-2024 14:13 Report Abuse
Krishnamurthy Venkatesan இதன் முடிவுகள் கலக்கம் தருகின்றன. ஆனாலும் இந்த கருத்து கணிப்பு தோல்வி அடைந்து பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற வேண்டும் என மனம் விழைகிறது.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்