Advertisement

வேறு வழியில்லாமல் வேட்பாளரான தமிழிசை: கனிமொழி விமர்சனம்

"கடந்த 10 ஆண்டுகாலம் கச்சத்தீவை பற்றி மோடி பேசவில்லை, எத்தனை முறை இலங்கைக்கு சென்றிருக்கிறார். அப்போது கூட அவர் பேசவில்லை. தேர்தல் வந்துவிட்டதால் தமிழக மக்கள் மீது மோடிக்கு பாசம் வந்துவிட்டது" என, தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி பேசினார்.

தி.மு.க., தென்சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து கனிமொழி பேசியதாவது:

தேர்தல் நெருங்குவதால் இரு மாநில முதல்வர்களை பா.ஜ., கைது செய்துள்ளது. மக்கள் பா.ஜ.,வை எதிர்த்து போராட துவங்கிவிட்டனர். நாட்டை பா.ஜ.,விடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என மக்கள் உணர்ந்துவிட்டனர்.

கடந்த 10 ஆண்டுகாலம் கச்சத்தீவை பற்றி மோடி பேசவில்லை, எத்தனை முறை இலங்கைக்கு சென்றிருக்கிறார். அப்போது கூட அவர் பேசவில்லை. தேர்தல் வந்துவிட்டதால் தமிழக மக்கள் மீது மோடிக்கு பாசம் வந்துவிட்டது.

இந்தியாவுக்குள் சீனா ஊடுருவிக் கொண்டிருக்கிறது, சில இடங்களில் பெயரைக் கூட சீன மொழியில் வைத்துளளனர். எல்லையில் உள்ள அத்தனை மாநிலங்களிலும் சீனா ஊடுருவி வருகிறது. இதைப் பற்றி மோடி வாய்திறப்பது இல்லை.

இது தொடர்பாக பார்லிமென்டில் ராகுல் கேள்வி எழுப்பியும் பதில் வரவில்லை. தேர்தல் பத்திரம் போன்ற ஊழலை யாரும் செய்து பார்த்ததில்லை. சட்டத்தைப் போட்டு ஊழல் செய்வது எப்படி என்பதை பா.ஜ., காட்டியுள்ளது.

லாபம் பார்க்காத 32 நிறுவனங்கள் 100 முதல் 200 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., வுக்கு நன்கொடை தந்துள்ளது. மக்களை மிரட்டி எப்படிப் பணம் பெற முடியுமோ அதை செய்து கொண்டிருக்கும் ஆட்சி தான் பா.ஜ.,

அதானி, அம்பானிக்கு பிரச்னை என்றால் பிரதமர் பல நாடுகளுடன் பேசி தீர்வு காண்பார். மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யவில்லை. விவசாயக் கடன், கல்விக்கடனை ரத்து செய்யாமல் கார்ப்ரேட்டுகளுக்கு மட்டும் 14 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

பா.ஜ., ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.அரசியல் ஆதாயத்திற்காக மக்களைக் குழப்பி ஒற்றுமையை சீர்குலைக்கிறது, பா.ஜ., மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் இது தான் கடைசி தேர்தல்.

தமிழிசை சவுந்தரராஜன் 4 வருடங்கள் கவர்னராக இருந்தார். பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அரசு அனுப்பும் கோப்புகளில் கையெழுத்து போடுவது கிடையாது.

தமிழிசையும் இதுபோல கையெழுத்து போடாமல் இழுத்து வந்தார். நீதிமன்றம் இங்குள்ள கவர்னரை கண்டித்த பின் பயந்து போய்விட்டார். 'அவமானம் நேரக்கூடாது' என்பதற்காக கையெழுத்து போட்டார்.

வேறு வழி இல்லாமல் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமிழிசைக்கு யாரும் வாக்களித்து விடாதீரகள். அ.தி.மு.க.,வுக்கு செலுத்தும் ஓட்டும் பா.ஜ.,வுக்கு செலுத்தும் ஓட்டும் ஒன்று தான்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்