திண்டுக்கல்லில் குவியும் வெளிமாவட்ட நிர்வாகிகள்
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் பிரதான கட்சிகள் போட்டியிடாமல் தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளன. அதனால், பிரசாரமும் மந்த நிலையில் உள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளில் சிலர் வேறு மாவட்டங்களின் பிரசாரத்திற்கு சென்றுவிட்டனர்.
அதனால், இத்தொகுதியில் போட்டியிடும் சிறிய கட்சிகள், சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களில் உள்ள தங்கள் கட்சி நிர்வாகிகளை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து பிரசாரத்தில் ஈடுபடுத்துவதில் இறங்கியுள்ளனர்.
அதனால், வெளி மாவட்டங்களை சேர்ந்த மா.கம்யூ.,- எஸ்.டி.பி.ஐ., - பா.ம.க., நிர்வாகிகள் திண்டுக்கல்லில் குவிய ஆரம்பித்துஉள்ளனர்.
வாசகர் கருத்து