'மாஜி'க்களுக்கு அர்ச்சனை திண்டுக்கல்லில் கொந்தளிப்பு
அ.தி.மு.க., துவங்கப்பட்டது முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது
திண்டுக்கல் லோக்சபா தொகுதி. இதுவரை அ.தி.மு.க., 8 முறை திண்டுக்கல்
தொகுதியில் வென்றது. 2019 தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இந்த தொகுதி
பா.ம.க., விற்கு ஒதுக்கப்பட்டது. அதில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு
வித்தியாசத்தில் தி.மு.க., வெற்றி பெற்றது.
இந்த முறை திண்டுக்கல்
தொகுதியில் கட்சி நேரடியாக களம் காணும் என தொண்டர்கள் உற்சாகத்தில்
இருந்தனர். தி.மு.க., கூட்டணியில் மா .கம்யூ., க்கு ஒதுக்கியதும் அந்த
உற்சாகம் இருமடங்காக மாறியது. ஆனால் எதிர்பாராத வகையில் எஸ்.டி.பி.ஐ.,
கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, அ.தி.மு.க., வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி
உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், கட்சியின் மாநில
பொருளாளராகவும், விஸ்வநாதன் துணைப் பொதுச்செயலராகவும் உள்ளனர். மாவட்ட
செயலர்களாகவும் உள்ளனர். மற்ற மாவட்டங்களைப் போல் அல்லாமல் திண்டுக்கல்
மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் உயர் பொறுப்புகளில் இருந்தும் தொகுதியை
விட்டுக் கொடுத்துள்ளனர்.
நேரடியாக திண்டுக்கல்லில் போட்டியிடலாம்
என தலைமையே அறிவுறுத்தியும் இவர்கள் ஆர்வம் காட்டவில்லை. முதன்முறையாக
இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி ஈட்டித்தந்த தொகுதியை, தொண்டர்களின்
எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் விட்டுக் கொடுத்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் .
வாசகர் கருத்து