ம.தி.மு.க.,வில் மவுனப்புரட்சி: தயார் நிலையில் மூத்த நிர்வாகிகள்

ஒரே தொகுதி, ஒரே வேட்பாளராக, தன் மகன் துரையை முன்னிலைப்படுத்தி ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ எடுத்த முடிவுக்கு, அக்கட்சியில் உருவாகியுள்ள மவுனப்புரட்சி எந்த நேரமும் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சு நடந்தபோது, தி.மு.க.,விடம், திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மயிலாடுதுறை, ஈரோடு, காஞ்சிபுரம் ஆகிய ஆறு தொகு திகளில் போட்டியிட ம.தி. மு.க., விருப்பம் தெரிவித் தது. மாநில நிர்வாகிகள் துரை, கணேசமூர்த்தி, மல்லை சத்யா, செந்தில்நாதன், ஆடுதுறை முருகன், டாக்டர் ரொக்கையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சீட் வழங்க வேண்டும் என்பதால், ஆறு தொகுதிகளை தர வேண் டும் என, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், ம.தி. மு.க., தொகுதி பங்கீடு குழு வினர் இரண்டு, மூன்று கட்ட மாக பேச்சு நடத்தினர்.

அதில், ஒரு தொகுதி தான் ஒதுக்க முடியும் என தி.மு.க., திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. இந்த தகவல் கட்சி யின் மாநில நிர்வாகிகளுக்கு தெரிய வந்ததும், அவர்க ளால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

தி.மு.க.,விடம் ஒரு லோக்சபா தொகுதி, ஒரு ராஜ்யசபா சீட் வாங்கி விட்டால், மாநில நிர்வாகி ஆறு பேரில் ஒருவருக்கு லோக்சபா தொகுதியை ஒதுக்கி தந்துவிட்டு, துரைக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கலாம் என வைகோ முடிவு செய்தார்.

மீண்டும் மீண்டும் கஜினிமுகமது போல அறிவாலயத் திற்கு ம.தி.மு.க., தொகுதி பங் கீடு குழுவினர் படையெடுத்து சென்றும், ராஜ்யசபா சீட்டை நடிகர் கமலுக்கு ஒதுக்கி விட்டதால், ம.தி.மு.க.,வுக்கு தர முடியவில்லை என தி.மு.க.,கைவிரித்து விட்டது. ஆனால், எந்த தொகுதியில் அவர் போட்டியிடுவது என்ற

பிரச்னை உருவெடுத்தது. விரு துநகர் வைகோவுக்கு சொந்த தொகுதி. தேனி துரையின் அம்மாவுக்கு சொந்த தொகுதி. எனவே, இந்த இரு தொகுதி களில் துரை போட்டியிடுவார் என அத்தொகுதி கேட்கப் பட்டது. விருதுநகரை விட்டுத் தர

காங்கிரஸ் விரும்பவில்லை. தேனியை விட்டுக் கொடுக்க தி.மு.க., விரும்பவில்லை. அதனால், திருச்சியில் போட் டியிட துரை முடிவு செய்தார். காரணம், அமைச்சர் நேரு மீது உள்ள பாசமே காரணம். திருச்சி 'சிட்டிங்' எம்.பி., திருநாவுக்கரசர் மீண்டும் போட் டியிட, தி.மு.க., விரும்பவில்லை.

இதனால், துரைக்கு திருச்சி உறுதியாகி டது. ஆனால், தொகுதியை ம.தி.மு.க.,வுக்கு உடனே

அறிவிக்காமல், கடைசி வரை மர்மம் நீடிக்க விட்டது. இதனால், ஈரோடு ஒதுங் குமா என எதிர்பார்த்த கணே சமூர்த்திக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ம.தி.மு.க.,வின் நிர்வாகக்குழு கூட்டத்தில் கணேசமூர்த்தி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

அவரது ஆதரவு மாவட்ட செயலர்கள் கந்தசாமி, குழந் தைவேலு உட்பட ஐந்து பேர் பங்கேற்கவில்லை. தூத்துக் குடி மாவட்ட செயலர் செல் வம் தன் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டு, பா.ஜ.,வில் ஐக்கியமாக ஆயத் தமானார்.

கொங்கு மண்டல ம.தி. மு.க., வினர், ஏற்கனவே துரை விட்யின் அரசியல் பிரவேசத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய மாநில நிர்வாகிகள்,

மாவட்ட செயலர்கள் அனை வரும் ரகசியமாக கூடி, அடுத் தகட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசிக்க உள்ளனர். தி.மு.க., கதவுகள் திறந்தால் அக்கட்சியில் சேருவது அல்லது அ.தி.மு.க., பா.ஜ., போன்ற கட்சிகளை நோக்கிச் செல்வது.

அதற்காக மவுனமாக புரட்சி செய்ய காத் திருக்கின்றனர். இந்த மவுனப் புரட்சி, ம.தி.மு.க.,வில் எந்த நேரத்திலும் புயலாகலாம்.

இதற்கு முத்தாய்ப்பாக, சமூக வலைதளம் பக்கங்களில் வைகோவின் வாரிசு அரசியலை கண்டித்து, ம.தி.மு.க., நிர்வாகிகள் தமிழகம் முழுதும் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்