தொகுதி மாறி தேர்தல் பணி பா.ஜ.,வில் குவியும் புகார்கள்
இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. பா.ஜ., 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜ., நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என, அக்கட்சித் தலைமை கேட்டுக் கொண்டது.
ஆனால், தென் சென்னையில் போட்டியிடும் முன்னாள் கவர்னர் தமிழிசைக்காக, மத்திய சென்னை, வட சென்னை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளைச் சேர்ந்த பல நிர்வாகிகள் வேலை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதுாரில் த.மா.கா., போட்டியிடுவதால், ஆலந்துார், பல்லாவரம், தாம்பரம் பா.ஜ.,வினர், தென் சென்னையில் வேலை செய்வதாக கூறப்படுகிறது.
திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி நிர்வாகிகள், மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவையிலும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடும் நீலகிரியிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அதுபோல, துாத்துக்குடி, தென்காசியைச் சேர்ந்த நிர்வாகிகள், கன்னியாகுமரி, நெல்லையில் பிரசாரம் செய்வதாக, அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவ விநாயகம் ஆகியோரிடம், ஏராளமான புகார்கள் குவிந்துள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து