சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சம்: திருமாவளவன் விமர்சனம்
சின்னத்தை ஒதுக்குவதில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக, வி.சி., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சிதம்பரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று தனது வேட்புமனுவை வி.சி., தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்தார். வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2 கோடியே 7 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளதாகவும் அசையா சொத்துகளின் மதிப்பு 28 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்பின், திருமாவளவன் கூறியதாவது:
அரசியல் கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுகிறது. பா.ஜ.,வுக்கு ஆதரவான கட்சிகளுக்கு உடனே சின்னம் கிடைக்கிறது. லோக்சபா தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டும். இந்த தேர்தலில் தென்னிந்திய மாநிலங்களில் பா.ஜ., கடும் தோல்வியை சந்திக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து