நீட் விலக்கு முதல் தங்கம் விலை குறைப்பு வரை: பா.ம.க., தேர்தல் அறிக்கை சொல்வது என்ன?

லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க., இன்று வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு முதல் மகளிர் உரிமைத் தொகை வரையில் ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

சென்னையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில், இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

2021ம் ஆண்டுக்கான சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு பா.ம.க., வலியுறுத்தும்.

உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பை நீக்க நடவடிக்கை

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயர் நீக்கப்படும்.

கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு புதிய அமைச்சகம் உருவாக்க நடவடிக்கை

தேவேந்திரகுல வேளாளர்களை பட்டியல் வகுப்பில் இருந்து நீக்கவும் அவர்களை தனி பிரிவாக பிரித்து இடஒதுக்கீடு வழங்கவும் நடவடிக்கை

தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். வருமான வரி உச்சவரம்பு 10 லட்சமாக அதிகரிக்கப்படும்.

60 வயதைக் கடந்தவர்களுக்கு மாதம்தோறும் ரூ.3000 ஓய்வூதியம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு இடத்தில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கப்படாது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 லட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 உரிமைத்தொகை

தங்கம் மீதான 15 சதவீத இறக்குமதி வரி முற்றிலும் ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு 6 ஆயிரம் ரூபாய் குறையும்.

அனைத்து சாதியினருக்கும் மக்கள் தொகைக்கு இணையாக இடஒதுக்கீடு

மத்திய அரசின் வரி வருவாயில் தமிழகத்துக்குக் கிடைக்கும் பகிர்வை அதிகரிக்க நடவடிக்கை

காவிரி - கோதாவரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3000, ஒரு டன் கரும்புக்கு ரூ,5,000 என கொள்முதல் விலையை நிர்ணயிக்க நடவடிக்கை

என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை

நீதித்துறை மற்றும் தனியார் துறையில் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.


கனோஜ் ஆங்ரே - மும்பை, இந்தியா
27-மார்-2024 18:54 Report Abuse
கனோஜ் ஆங்ரே இதெல்லாம் சொன்னீங்களே.... காதல் திருமணம் செய்வதற்கு அப்பா, அம்மா ஒப்புதல் சான்றிதழ் இருந்ததான்...னு சட்டம் கொண்டு வரப்படும்...னு சொல்லி இருக்காங்களே, அதைச் சொல்லலியே...?
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்