ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை; சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர், ஓட்டளிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, திருவொற்றியூர் தொகுதியில், 1 லட்சத்து, 55 ஆயிரத்து, 20 பெண்கள்; 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 803 ஆண்கள், மூன்றாம் பாலினத்தவர், 145 பேர் என, மொத்தம், 3 லட்சத்து, 5,968 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில், நட்சத்திர வேட்பாளரான நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க., கே.பி.சங்கர், அ.தி.மு.க., கே.குப்பன், ம.நீ.ம., மோகன், அ.ம.மு.க., சவுந்திரபாண்டியன் உட்பட, 20 வேட்பாளர்கள் களம் கண்டனர். ஆனால், திருவொற்றியூரில், எதிர்பார்த்த அளவிற்கு ஓட்டுகள் பதிவாகவில்லை, வெறும், 65 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே பதிவாயின. இது கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன்படி, 99 ஆயிரத்து, 789 ஆண்கள்; 99 ஆயிரத்து, 193 பெண்கள்; 14 மூன்றாம் பாலினத்தவர் என, 1 லட்சத்து, 98 ஆயிரத்து, 996 ஓட்டுகள் மட்டுமே பதிவாகியதாக தெரிகிறது. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும், ஓட்டுப்பதிவில், 66.17 சதவீதமும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பினும், ஓட்டு பதிவில், 64 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர், 9.65 சதவீதம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். இந்த தொகுதியில் மட்டும், 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது மூன்றில் ஒரு பங்கினர், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தவறியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் கவனித்து, ஓட்டு போடாதவர்களின் பெயர்களை அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கினால் தான், மறுமுறை ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வரும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு, 67.98 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


shyamnats - tirunelveli,இந்தியா
14-ஏப்-2021 08:18 Report Abuse
shyamnats மக்களை ஓட்டு போட வைப்பதற்கு மிக எளிமையான தீர்வு உள்ளது. இப்பொழுது, நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருட்கள் வாங்க முடிகிறது இல்லையா, அதுபோல நாட்டில் எங்கிருந்தாலும் ஆதார் கார்டை காண்பித்து ஓட்டளிக்க வசதி செய்தாலே எளிதாக தீரும். (முன்னதாக ஆதார் கார்டை நம்பிக்கைக்குரியதாக மாற்ற வேண்டும்- பெருவாரியான எண்ணிக்கையில் தமிழ் நாட்டிலேயே ரோஹிங்கிய முசுலீம்கல் ஆதார் முதலான அடையாளங்களை வைத்திருப்பதாக 2 நாள் முன்பாக மீடியாக்களில் வந்த தகவலை கவனிக்க - பின்னர் அசாம், மேகாலயா கதைகள் வேறு இருக்கின்றன). மக்கள் குடியுரிமை சட்டத்தையும், பொதுமக்கள் கணக்கெடுப்பையும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும். நாட்டின் உண்மையான பிரஜைகள் பற்றி தகவல் வேண்டும். மற்ற நாட்டின் ஊடுருவிகள் கலையெடுக்க பட வேண்டும்.
Tamil - chennai,இந்தியா
13-ஏப்-2021 20:03 Report Abuse
Tamil சீமான் வோட்டுக்கு பணம் கொடுக்காத காரணத்தால் திமுக சங்கர் மற்ற தொகுதி திமுக செலவு செத்தது போல இங்கு செலவு செய்திருக்க வாய்ப்புகள் இல்லை, எங்க எங்க பணம் கொடுக்கப்பட்டதோ அங்கு மட்டும் தான் தமிழ்நாட்டில் 70% வோட்டு தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது, பணம் செலவு செய்யாமல் தேர்தல் நடத்தினால் ஐம்பது சதவிகிதம் மேல் வோட்டு விழாது, அதுவும் பொம்பளைங்க பணம் கொடுக்காவிட்டால் வோட்டு போடுவது இல்லை நல்லது தான் பணம் வாங்கிக்கொண்டு மானம் கெட்ட மக்கள் போடாமல் இருப்பதே நல்லது.
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
12-ஏப்-2021 16:09 Report Abuse
Anushya Ganapathy இது எப்படி சீமான் தொகுதி ஆகும்? அவரு இப்போ தானே போட்டிபோடுறார். dmk சங்கர் க்கு தான் எங்கள் வோட்டு என்று தானே எல்லோரும் சொன்னாங்க. என்னமோ dmk, admk பேச்ச கேட்டு தெளிவா இருந்தவங்கள மூளைகளை சீமான் குழப்பி விட்டுட்டாருன்னு சிண்டு முடிச்சிவிடுறீங்க.
Baskar - Paris,பிரான்ஸ்
09-ஏப்-2021 02:50 Report Abuse
Baskar இது போல் வோட்டு போடாதவர்கள் வாழ தகுதி அற்றவர்கள். கோடிக்கணக்கில் செலவு செய்து என்ன பிரயோசனம். ஒரு மனிதன் வோட்டு போடா வக்கில்லாதவனாக இருந்தால் அவனுக்கு குடும்ப கார்டு ஓசியில் அரிசி சக்கரை அரசு இலவசங்கள் அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு ஓசியில் யூனிபார்ம் செருப்பு பஸ் பாஸ் எந்த சலுகையும் கொடுக்க கூடாது. எல்லாவற்றையும் கேன்சல் பண்ண வேண்டும். அதே போல் மழை வெள்ளம் வந்தால் உதவி தொகைகளை கொடுக்க கூடாது. அப்போது தான் தெரியும் அவர்களுக்கு. ஓசியி பாட்டிலும் பிரியாணியும் தருகிறோம் மேலும் பணம் தருகிறோம் என்று சொன்னால் போதும் உடனே வரிசையில் நின்று விடுவார்கள். இன்று பாருங்கள் கும்பகோணத்தில் 200 ரூபாய்க்கு மளிகை சாமான்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று ஏமாற்ற பேர்வழி தினகரன் செய்த வேலையை பார்த்தீர்களா. ரூபாய்க்கு ஆசை பட்டு வோட்டு கூட போகாமல் இருக்கின்றனர். இந்த மக்களை பற்றி நாம் தான் கவலை படுகிறோம் ஆனால் அவர்கள் நம்மை மதிப்பதில்லை.
R RAMAKRISHNAN - Bangalore,இந்தியா
08-ஏப்-2021 22:44 Report Abuse
R RAMAKRISHNAN பெருவாரியான மக்கள் தங்கள் சொந்தவூரிலும் சென்னையிலும் வாக்காள அடையாள அட்டை வைத்திருக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் சொந்த ஊருக்கு வோட்டு போட சென்று விட்டார்கள்
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
08-ஏப்-2021 21:05 Report Abuse
Ranjith Rajan கொரோன காரணத்தால் வெளிநாட்டு வாழ் நண்பர்கள் ஊருக்கு வர முடியாமல் இருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பன் ஒரு முறை வந்து சென்றால் இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்த படுகிறார். அவரால் வேலைக்கு செல்ல முடியாது. உள்ளூர் மக்கள் ஓட்டு அளிக்காததற்கு காரணம் இறந்தவர்கள் பெயரை நீக்காதது, ஊர் மாறி சென்றவர்கள் அட்டையை மாற்றுவதற்கு பதில் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது போன்ற டுப்ளிகேட் வாக்காளர்கள் தன் ஓட்டு சதவீத சரிவுக்கு காரணம். ஆனால் எப்போதும் சென்னை மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப் படுகிறது.
Vena Suna - Coimbatore,இந்தியா
08-ஏப்-2021 20:36 Report Abuse
Vena Suna சீமான் நிக்கிறதுக்கு எதிர்ப்பா?
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
08-ஏப்-2021 20:10 Report Abuse
Rajagopal சீமான் காசு தர மாட்டேன்னு சொல்லிட்டாருல்ல? அதான் காசு வாங்கி ஓட்டு போட்டுப் பழகினவங்க வரல்ல.
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
08-ஏப்-2021 19:31 Report Abuse
மலரின் மகள் ///////தேர்தல் ஆணையம் கவனித்து, ஓட்டு போடாதவர்களின் பெயர்களை அதிரடியாக பட்டியலில் இருந்து நீக்கினால் தான், மறுமுறை ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் வரும் என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.////// மலர் இவ்வாறு நினைப்பது தவறு. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வந்து வாக்களிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. வெளிமாநிலம் வெளி ஊர்களுக்கு சென்றவர்கள் என்று எத்துணையோ நியாயமான காரணங்கள் இருக்கலாமல்லவா வாக்காளர்களுக்கு. அதற்கும் மேலாக நமது தேர்தல் ஆணையம் எதற்காக குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக அங்கீகரிக்கிறது என்று தெரியவில்லை. அதனால் அவர்களை போன்றோருக்கு வாக்களிக்க விருப்பமில்லாமல் அடுத்தமுறை நல்லவர்கள் நின்றாள் வாக்களிக்கலாம் என்று கூட ஐயூர்க்கலாமல்லவா. வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வருடவருமானம் பெற்று நவீன சொகுசு கார்களில் வளம் வந்துகொண்டு சிருங்கார வாழ்க்கை வாழ்வோரின் எழுத்துபூர்வமான வருமானத்தை அப்படியே ஏற்கிறது தேர்தல் கமிஷன், முதலில் வேட்பாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர்களை அப்படியே ஏற்காமல் அவர்கள் கொடுத்த தகவல்கள் சரிதானா என்று அரசின் வருமானவரித்துறை என்று பல்வேறு துறைகளின் கணக்கு வழக்குகளை ஆய்ந்து அதில் பூரண திருப்தி இருந்தால் மட்டுமே வேட்பாளர்களை அனுமதிக்கவேண்டும். அதற்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் நாட்களுக்கும் அதை சரிபார்ப்பதற்கும் நல்ல கால அவகாசம் தந்து அதன் பிறகு தேர்தலை நடத்தலாம். தேர்தல் நடைக்கும் விதத்தில் அடிப்படைகளில் உடனடியாக மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அதை தான் கவனிக்கவேண்டும். வாக்காளர்களை குறை கூறுவது தவறு, இந்த மில்லினியத்தின் எந்த வாக்கு உரிமையையும் விட்டதே இல்லை. ஆனால் இம்முறை மட்டும் வருவதற்கு வாய்ப்பில்லாமல் போனது என்போன்றோருக்கு. மே மாத துவக்கத்தில் தேர்தல் நடந்திருந்தால் பலருக்கு வந்து வாக்களிக்க முடிந்திருக்கும். ரமதான் பண்டிகையும் விடுமுறை சில தேசங்களில் இருப்போருக்கும், ஆண்டு விடுமுறை பலருக்கும், இந்திய ஆண்டு விடுமுறையை அனுசரித்து தாயகம் வரும் வெளிநாட்டவர்களுக்கு என்று அனைவருக்கும் வசதியாக இருந்திருக்கும். கோடைக்கு முன்பே தேர்தல் நடத்தவேண்டும் என்று நல்ல சுட்டெரிக்கும் வெயில் ஆரம்பிக்கும் பொது அதுவும் நமது உடல் தகவமைத்து கொள்ள முயல்கின்ற காலத்தில் தேர்தல் நடத்தியிருக்கிறார்கள். அவசரம் என்னவோ,
tirou - EVRY,பிரான்ஸ்
08-ஏப்-2021 22:56Report Abuse
tirouஅதற்குத்தான் நோட்டா இருக்கிறது...
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
08-ஏப்-2021 18:42 Report Abuse
Pandian சீமான் எல்லா கூட்டத்திலும் வாக்கு எந்திரம் , தேர்தல் ஆணையம் பற்றி தவறான கருத்தை பரப்பி மக்களை குழப்பி வந்ததால் , மக்கள் தேர்தல் மீதும் வாக்கு எந்திரம் மீதும் நம்பிக்கை இல்லாமல் ஓட்டு போடா வரவில்லை . யாருக்கு போட்டாலும் தாமரைக்கு விழுகும்னு சீமான் பொய் பரப்புரை இதற்கு காரணம் .
மேலும் 59 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)