அ.தி.மு.க.,வினருக்கு அழைப்பு: ஓ.பி.எஸ்.,க்கு கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛‛ அ.தி.மு.க., தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் '' எனக் கூறியுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அதிமுக., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக., தோல்வியடைந்தது.
பாவகாரியம்
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்,‛‛ ஒற்றை குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப் போன கட்சியையும் அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்துக்கும் ஆயத்தமாகுவோம் '' எனக்கூறியிருந்தார்.
உரிமை இல்லை
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.,வின் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.,வில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். 2019 லோக்சபா தேர்தலில் 18 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளது. தற்போது இ.பி.எஸ்., தலைமையில் 20.46 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.
தமிழகத்தின் உரிமைகளை காக்க தேசிய கட்சிகள் முன்வருவதில்லை. 2026ல் தி.மு.க.,வை தோற்கடித்து அதிமுக., ஆட்சி அமைப்போம். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். ஜெ.,யை கடுமையாக அண்ணாமலை விமர்சித்ததை ஓபிஎஸ் கண்டிக்கவில்லை.
அதிமுக தொண்டர்களை அழைக்க ஓபிஎஸ்.,க்கு உரிமை இல்லை. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை ஓபிஎஸ் கண்டிக்கவில்லை. பா.ஜ., உடன் இணைந்து அதிமுக., வேட்பாளரை எதிர்த்தார். இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.
வாசகர் கருத்து