அ.தி.மு.க., ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ஊத்தங்கரை: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன், 4ல் நடக்கிறது. இதையொட்டி ஊத்தங்கரையில், அ.தி.மு.க., சார்பில், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். கட்சியன் துணை பொதுச்செயலாளர், முனுசாமி எம்.எல்.ஏ., ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது, அ.தி.மு.க., தொண்டர்கள் மிக கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வெற்றி தோல்வியை சமமாக எண்ணும் மனப்பக்குவம் வேண்டும் என்றார்.
இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அசோக்குமார், கிருஷ்ணகிரி லோக்சபா வேட்பாளர் ஜெயபிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம், பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், மத்துார் ஒன்றிய செயலாளர் தேவன், சக்கரவர்த்தி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடந்தது. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார் தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி ஆலோசனை வழங்கி பேசினார்.
மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து