ஒலிவாங்கியை வாங்க மறுக்கும் சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில், 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். அக்கட்சி முன்னர் பயன்படுத்திய கரும்பு விவசாயி சின்னத்தை, கர்நாடகாவை சேர்ந்த கட்சிக்கு, தேர்தல் கமிஷன் ஒதுக்கியது. அச்சின்னத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில், அக்கட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. திரைப்பட பாடல் பதிவிற்கு பயன்படுத்துவதை போன்ற பழைய மைக் படம், தேர்தல் கமிஷனால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், மக்கள் மத்தியில் மேடைகளில் பயன்படுத்தும் மைக் பிரபலமானதாக உள்ளது. இதனால், கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும், மைக் சின்னத்தால் குழப்பம் ஏற்படும் என, அக்கட்சி கருதுகிறது. எனவே, மைக்கிற்கு பதிலாக படகு அல்லது கப்பல் சின்னத்தை வழங்கும்படி தேர்தல் கமிஷனில் விண்ணப்பம் செய்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. சின்னம் உறுதியாக தெரியாத நிலையில், நாம் தமிழர் கட்சியினர், பல்வேறு தொகுதிகளில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
வாசகர் கருத்து