லோக்சபாவில் 'டாப்' தொகுதியில் 'வீக்'
தென்காசி (தனி) தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க.,வைச் சேர்ந்த தனுஷ்குமார் வெற்றி பெற்றார். பட்டதாரியான அவர், கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் பெயர் சொல்லும் அளவில் பெரிய திட்டங்களை கொண்டு வரவில்லை. ரயில்வே தொடர்பான சில கோரிக்கைகளை முன்வைத்ததோடு சரி.
தற்போதைய லோக்சபாவில் அதிக கேள்விகளை கேட்ட எம்.பி.,க்களில் தமிழகத்தில் இரண்டாமிடமும், தேசிய அளவில் 31வது இடத்தையும் பிடித்து தனுஷ்குமார் சாதனை படைத்துள்ளார். அதனால் என்ன பலன்?
சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க., எடுத்த சர்வேயில், தனுஷ் குமார் தொகுதி மக்களிடம் நெருங்கிய தொடர்பு இல்லாமல் 'வீக்காக' இருப்பதாக ரிப்போர்ட் போனது. விளைவு, இந்த முறை அவருக்கு சீட் கிடைக்கவில்லை. புதுமுகமான ராணி ஸ்ரீகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து