கேரளாவில் வேஷம் தமிழகத்தில் பாசம்
'இண்டியா' கூட்டணியின் நிலை கேரளாவில் விசித்திரமானது. இங்கு கூட்டணியின் முக்கிய அங்கமான காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன. மூன்றாவது அணியாக பா.ஜ., போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 20 தொகுதியும் எங்களுக்கு தான் என்று மா.கம்யூ.,வும் -காங்கிரசும் தனித்தனியே மார்தட்டுகின்றன. ஆனால் இண்டியா கூட்டணிக்கு தான் 20 தொகுதிகளும் என்று எங்கும் சொல்ல மாட்டார்கள். இப்படி கூட்டணி குழப்பத்தின் உச்சியில் அங்கு தேர்தல் பிரசாரம் நடக்கிறது.
பல தொகுதிகளில் காங்., கூட்டணிக்கும், மா. கம்யூ., கூட்டணிக்கும் தான் நேரடி போட்டி. பா.ஜ., அந்த தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் தான் உள்ளது.
'நாங்கள் வெற்றி பெற்றால் ராகுல் தான் பிரதமர்' என்று காங்., சொல்கிறது.
'கம்யூனிஸ்ட்களுக்கு யார் பிரதமர்? ராகுல் தான் பிரதமர் என்று சொல்ல வேண்டியது தானே' என பா.ஜ., சிண்டுமுடிகிறது.
இதைபார்த்துக்கொண்டிருக்கும் காங்கிரசும், கம்யூ., கூட்டணியை பார்த்து அதே கேள்வியை கேட்கிறது.
''கேரளாவின் பாலக்காட்டில் இருந்து கிளம்பி ஒரு பஸ்சில் திண்டுக்கல், மதுரைக்கு போய் பாருங்கள். உங்கள்(மா.கம்யூ.,) வேட்பாளர்கள் ராகுல், ஸ்டாலின் படத்தை வைத்து ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மதுரையின் மா.கம்யூ., வேட்பாளர் சு.வெங்கடேசன், அவரது கட்சியின் பொலிட் பீரோ- மத்திய தலைவர்களின் படம் ஏதும் இல்லாமல் ஸ்டாலின், ராகுல் படத்தை பெரிதாக வைத்து நடுவில் அவர் இருப்பது போன்ற போஸ்டர்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். அங்கு உங்களுக்கு ராகுல் வேண்டும்; இங்கு ராகுல் உங்கள் விரோதி'' என்று மா.கம்யூ., கூட்டணியை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார் கேரள மாநில காங்., செய்தி தொடர்பாளர் ஜோதி குமார்.
வாசகர் கருத்து