Advertisement

கேரளாவில் கம்யூனிஸ்ட்டை கவிழ்த்த காங்கிரஸ்

திருவனந்தபுரம்: தேசிய அளவில் ‛ இண்டியா ' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட்டை, காங்கிரஸ் கவிழ்த்துள்ளது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும், கம்யூ., 1 தொகுதியில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது.



தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ‛ இண்டியா' கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களில் இணைந்து தேர்தலை சந்தித்த அவ்விரு கட்சிகள், கேரளாவில் மட்டும் இரு கட்சிகளும் ஒவ்வொன்றை எதிர்த்து களமிறங்கின. கொள்கையை இதற்கு காரணம் என இரு கட்சிகளும் சமாளித்தன.



ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் 13 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 2, பா.ஜ., மாநிலத்தை ஆளும் கம்யூ., கட்சி, கே.இ.சி., ஆர்எஸ்பி ஆகிய கட்சிகள் தலா 1 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. மற்ற மாநிலங்களை போல் அல்லாமல், காங்கிரஸ் தனித்து களம் கண்டதே, அம்மாநில ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற மாநிலங்களில் கூட்டணியாக கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட்டை, கேரளாவில் காங்கிரஸ் கவிழ்த்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்