புதிய எம்.பி.,க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 543 எம்பி.,க்களில் கிரிமினல் வழக்கு உள்ளவர்கள் மொத்தத்தில் 46 சதவீதம் பேர் என்றும் , இது வரை இல்லாத அளவிற்கு கிரிமினல் வழக்கு உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 2019ல் 233 எம்.பி.,க்கள், 2014ல் 185எம்.பி.,க்கள், , 2009ல் 162 எம்.பி.,க்கள், 2004 ல் 125 எம்.பி.,க்கள், குற்றப்பின்னணி உடையவர்கள்.
தற்போது தேர்வாகி உள்ள எம்.பி.,க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இதில் 170 பேர் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கொடூர குற்றம் புரிந்தவர்கள் ஆவர். இந்த கொடூர குற்றம் புரிந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. 27 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 15 பேர் மீது பெண்கள் மீது தாக்குதல், வன்கொடுமை, பாலியல் தொடர்பான வழக்கு உள்ளது.
தி.மு.க.,வில் 13 பேர்
பா.ஜ.,வில் மொத்தம் வெற்றி பெற்ற 240 பேரில் 94 பேர் மீது கிரிமினல் வழக்கும், காங்கிரஸ் கட்சியில் 99 பேரில் 49 பேர் மீதும், சமாஜ்வாதியில் 21 பேர் மீதும் திரிணாமுல் காங்கிரஸ்சில்13 பேர் மீதும், திமுகவில் 13 பேர் மீதும் கிரிமினல் வழக்குள் உள்ளது. இவ்வாறு இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து