தே.மு.தி.க.,வுக்கு 5 சீட்: விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டி?
அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரனும் கள்ளக்குறிச்சியில் எல்.கே.சுதீஷும் போட்டியிடவும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால், வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தி.மு.க., சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் விவரம் இன்று வெளியாகி உள்ள நிலையில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிடக் கூடிய 16 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
இதில், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., கூட்டணியில் திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சை, விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிடுகிறது. இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
தே.மு.தி.க., சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் குறித்த விவரம் ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது.
வாசகர் கருத்து