நோட்டாவுக்கு ஓட்டு போட்ட 4.5 லட்சம் பேர்: ஸ்ரீபெரும்புதூர் முதலிடம்
சென்னை: தமிழகத்தில் நோட்டாவுக்கு 4.5 லட்சம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. அதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முதலிடத்தில் உள்ளது.
ஒரு தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் பிடிக்காதவர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுவது வழக்கம். அதற்கு அதிக ஓட்டுகள் பதிவானாலும், அதனால் எந்த பலனும் இல்லை. ஏப்., 19ல் தமிழகத்தில் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. அதில் பதிவான ஓட்டுகள் நேற்று ( ஜூன் 04) எண்ணப்பட்டன. அதில், மாநிலம் முழுவதும் நோட்டாவுக்கு 4,61,327 ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டு சதவீதம் 1.06%
நோட்டாவுக்கு அதிக ஓட்டுகள் பதிவான தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர் முதலிடத்தில் உள்ளது. அங்கு, நோட்டாவுக்கு 26,450 ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
* ஸ்ரீபெரும்புதூர்- 26,450
* திண்டுக்கல்- 22,120
* திருவள்ளூர்- 18,978
*திருப்பூர்- 17,737
*தென்காசி- 17,165
* காஞ்சிபுரம்- 16,965
*சேலம் 14,894
* பொள்ளாச்சி- 14,503
* ஈரோடு- 13,983
20 தொகுதிகள்
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, மதுரை, அரக்கோணம், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், பொள்ளாச்சி, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 20 தொகுதிகளில் நோட்டாவுக்கு 10 ஆயிரத்திற்கும் மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
கன்னியாகுமரியில் நோட்டாவுக்கு 3,755 ஓட்டுகள் பதிவாகி உள்ளது.
வாசகர் கருத்து