Advertisement

லோக்சபாவுக்கு தேர்வான இளம் வயது எம்.பி.,க்கள்

புதுடில்லி: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், 25 வயதுக்கு கீழ் உள்ள 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.



காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் ஷாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பி.,க்கள் ஆகி உள்ளனர்.



அவர்களின் விவரம்

சஞ்சனா ஜாதவ்



ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சனா ஜாதவ் வயது 25. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தானில் போலீஸ் ஏட்டு ஆக பணிபுரியும் கப்தன் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

ஷாம்பவி சவுத்ரி



பீஹாரில் நிதீஷ்குமார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் அசோக் சவுத்ரியின் மகள் தான் ஷாம்பவி சவுத்ரி. இவர் வயது 25.. பீஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் களமிறங்கி காங்., வேட்பாளரை தோற்கடித்தார். லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, இளம் வயது வேட்பாளர் என பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.

பிரியா சரோஜ்



சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட பிரியா சரோஜ் தந்தை டூபானி சரோஜ் 3 முறை எம்.பி., ஆக இருந்தவர். மச்சில்சாஹர் தொகுதியில் 35,850 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

புஷ்பேந்திர சரோஜ்



சமாஜ்வாதி கட்சி சார்பில் கவுசம்பி தொகுதியில் போட்டியிட்டவர் புஷ்பேந்திர சரோஜ். 25 வயதாகும் இவர் 1,03,944 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர், சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இந்தர்ஜித் சரோஜ் என்பவரின் மகன். தந்தை 2019 ல் இந்த தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், மகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார். புஷ்பேந்திர சரோஜ், லண்டன் குயின் மேரி பல்கலையில் கணக்கு பதிவியல் மற்றும் நிர்வாகம் குறித்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்