தி.மு.க.,வுக்கு மக்கள் முழு ஆதரவு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. நாற்பதும் நமதே என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியது போல் 38 ல் வெற்றியை நெருங்கியுள்ளது. எதிர்கட்சியான அதிமுக மண்ணை கவ்வியது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றில் பா.ஜ., இது வரை இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. , 7 தொகுதிகளில் அதிமுக 3 வது இடத்திற்கும் 3 தொகுதிகளில் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. மத்திய சென்னை, தென்சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், நீலகிரி, புதுச்சேரி, வேலூர், தேனி, ராமநாதபுரம் தொகுதிகள் பா.ஜ.,வுக்கு 2 இடத்தை தந்துள்ளது.
30 தொகுதிகளில் அதிமுக 2வது இடத்தை பிடித்துள்ளது. பா.ஜ., கூட்டணி 10 தொகுதிகளில் 2 வது இடத்திற்கு வந்துள்ளது. பா.ஜ.,வுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொண்டதால் பழனிசாமி எதிர்வினை முடிவை சந்தித்து இருப்பதாக அரசியலாளர்கள் கூறுகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள் , ம.தி.மு.க.,விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கட்கிள் இடம் பெற்றன. திமுகவை பொறுத்தவரை எப்போதும் உள்ள திமுக ஓட்டுக்கள் சிதறவில்லை. மேலும் சமீபத்திய பெண்களுக்கான உரிமைத்தொகை மாதம் ஆயிரம், பெண்களுக்கு இலவச பஸ், மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி என்ற திட்டங்கள் வரவேற்பை பெற்று திமுகவுக்கு பெண்களின் ஆதரவு ஓட்டாக மாறியது.
அண்ணாமலையின் வியூகம்
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் , சரத்குமார் தலைமையிலான சமத்துவமக்கள் கட்சி பா.ஜ.,வுடன் இணைக்கப்பட்டது. மேலும் பாட்டாளிமக்கள் கட்சி, வாசனின் தமிழ்மாநில காங்கிரஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அவரது ஆதரவாளர்கள், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாரிவேந்தரின் இந்தியஜனநாயக கட்சி, ஏ.சி சண்முகத்தின் புதியநீதி கட்சி, ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், யாதவ மக்களை கொண்ட தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பா.ஜ.,வில் 8 அரசியல் கட்சிகளும் மேலும் பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்தன. பா.ஜ., தலைவர் அண்ணாமலையில் அரசியல் வியூகம், அவரது பிரசாரம், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் திமுக வின் ஊழல்கள் தொடர்பான பட்டியல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி தமிழக மக்களை தன் பக்கம் திரும்பி பாரக்க வைத்தார்.
அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க., , புதிய தமிழகம் மற்றும் சில உதிரிகட்சிகளே இடம்பெற்றன. இதில் மிக ' வீக் 'கான கூட்டணியாக அதிமுக அமைந்தது. தனிப்பட்ட கருத்து வேறுபாட்டில் அண்ணாமலையுடன் பழனிசாமி மோதல் போக்கை கடைபிடித்தார். இதுவே இவருக்கு பெரும் பாதகமாக அமைந்து விட்டது. இந்தியாவுக்கான தேர்தலில் யார் பிரதமர் என்று கை காட்டும் தேர்தலில் அதிமுக இந்த நிலைப்பாட்டை மறந்து தேர்தலை சந்தித்தது பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது என கூறலாம்.
சீமான் கட்சிக்கு ஓட்டு
நாங்க எப்போதும் தனித்தே போட்டியிடுவோம் என்ற சீமானின் நாம்தமிழர் கட்சிக்கு கணிசமாக எல்லா தொகுதிகளிலும் ஓட்டு கிடைத்துள்ளது. பல தொகுதிகளில் 3வது 4 வது இடத்திற்கு வந்துள்ளது.
வாசகர் கருத்து