ஆதரவுக்கு நன்றி!

அன்பார்ந்த வாசகர்களே வணக்கம்.

லோக்சபா தேர்தல் களத்தில் நிலவும் சுவாரஸ்யமான தகவல்களையும் பிரத்யேக தகவல்களையும் தொகுத்து உடனுக்குடன் தமிழ் மக்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு, மற்ற இணைய இதழ்களில் இருந்து சற்றே வேறுபட்டு 'தேர்தல் களம்' இணைய இதழ் துவங்கப்பட்டது. கிட்டதட்ட ஐம்பது நாட்கள் ஒவ்வொரு நிமிடமும், தமிழகத்தின் பல முனைகளில் இருந்தும் பெறப்பட்ட அரசியல் செய்திகள் உடனுக்குடன் உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன.

நாட்கள் குறைவுதான் என்றாலும், இன்று வரை 1 கோடிக்கும் கூடுதலானோர், லோக்சபா தேர்தலுக்கான இந்த பிரத்யேக இணையதளத்தை பார்வையிட்டு வாசித்துள்ளீர்கள் என்பதை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இந்த இணைய இதழ் வெற்றிக்காக கூடவே நின்ற ஒவ்வொரு வாசகருக்கும், இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தேர்தலுக்காக மட்டுமே துவங்கப்பட்ட இந்த பிரத்யேக இணைய இதழ் இன்றோடு தன்னுடைய சேவையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறது.

மீண்டும் அடுத்த தேர்தலின்போது சந்திப்போம். நன்றி.

நிர்வாகி, தேர்தல் களம்


Bharathi - Melbourne, ஆஸ்திரேலியா
21-ஏப்-2024 10:18 Report Abuse
Bharathi த்ரவிட கட்சிகள் அளவுக்கு பிஜேபிக்கு கட்டமைப்பு இல்லை. அதனால ஓட்டுகள் குறையலாம் தெரிஞ்சது தான். ஆனா மோடியை விட பப்புவை பிரதமரா மக்கள் விரும்பறாங்கன்னு ஒரு போடு போட்டீங்க பாருங்க. அவங்க கட்சிகாரங்களே அத நம்பள. இதுலே தெரியுது நீங்க எதோ நிர்பந்தத்துக்கு ஆளாயிட்டீங்கன்னு.
VENKATASUBRAMANIAN - bangalore, இந்தியா
21-ஏப்-2024 08:15 Report Abuse
VENKATASUBRAMANIAN ஓட்டு போடாதவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். அப்போதுதான் அனைவரும் ஓட்டு போட வருவார்கள்
Krishnamurthy Venkatesan - Chennai, இந்தியா
20-ஏப்-2024 17:04 Report Abuse
Krishnamurthy Venkatesan வோட்டர் லிஸ்டில் பெயர் நீக்கம் செய்திருப்பதால் ஓட்டுரிமை உள்ளவர்கள் பலர் தங்களுடைய ஜன நாயா உரிமையை செலுத்த முடியவில்லை
சிவா - Jeddah, சவுதி அரேபியா
20-ஏப்-2024 14:35 Report Abuse
சிவா தினமலர் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாக்காளர்களின் தேர்தல் விழிப்புணர்விற்கு தங்களால் இயன்றதை செய்யுங்கள். இன்னும் நம் தமிழ் நாட்டில் ஓட்டு சதவிகிதம் 70% தாண்டவில்லை. 30% மக்களின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமை.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்