அழகிரி ஆதரவாளர்களுக்கு திடீர் கிரீன் சிக்னல்

தி.மு.க.,வில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக, 2014ம் ஆண்டு, மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
தற்போதைய தி.மு.க., மா.செ.,க்கள் மற்றும் அமைச்சர்கள், அழகிரி ஆதரவாளர்கள் கட்சியில் சேர முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இருந்தபோதும், 'என் ஆதரவாளர்களை உங்க அப்பாவிடம் (ஸ்டாலின்) சொல்லி கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள சொல்லு' என அமைச்சர் உதயநிதியிடம் அழகிரி பேசினார். ஆனாலும் பலனில்லை. இதனால், வருத்தமடைந்த அவருடைய ஆதரவாளர்கள் அழகிரியை தொடர்புகொண்டு எப்படியாவது முதல்வர் ஸ்டாலினிடம் பேசுங்கள் என கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை அழகிரி ஏற்க மறுத்துவிட்டார். 'தேவையானால் நீங்களே கட்சி தலைமையிடம் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என சொல்லிவிட்டார்.
இதையடுத்து, அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்கள் வாயிலாக தங்கள் நிலைமையை தலைமைக்கு எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், கட்சி தலைமையில் உள்ள முக்கிய நபரிடமிருந்து மதுரை ஆதரவாளர்களுக்கு 'கிரீன் சிக்னல்' கிடைத்துள்ளது.
இதுகுறித்து அழகிரி ஆதரவாளரான மூத்த நிர்வாகி இசக்கிமுத்து கூறியதாவது:
பத்து ஆண்டுகளாக அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.,வுக்கு போகமுடியாமல், வேறு கட்சிக்கும் செல்ல மனசில்லாமல் உள்ளோம். மீண்டும் தி.மு.க.,விற்கு தான் செல்ல வேண்டும் என உறுதியாக உள்ளோம். எங்கள் நிலைப்பாடு குறித்து கட்சி தலைமையில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவரிடம் அனைத்து விபரங்களையும் பேசியுள்ளோம். அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சென்னையில் சந்திக்க அவர் ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அழகிரியிடமும் முறையாக தெரிவித்துவிட்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து