தென் மாவட்ட மக்கள் இனி ராமதாசை காண்பதெப்போ...?

கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், நிறைய முதல்வர் வேட்பாளர்கள் இருந்தனர். மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த், பா.ம.க., அணியில் அன்புமணி ராமதாஸ். எனவே, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கோ.க.மணி போன்றோர், தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்தனர்.

இந்த தேர்தலில், பா.ம.க., 23 சீட்களுடன் வட மாவட்டங்களில் முடங்கிக் கொண்டது. லோக்சபா தேர்தலின் போதும், ராமதாசும், அன்புமணியும் தென் மாவட்டங்களுக்கு வரவில்லை.விடுதலை சிறுத்தைகள் கட்சியும், தி.மு.க., அணியில், ஆறு, 'சீட்'களை வட மாவட்டங்களில் வாங்கிக் கொண்டு திருமாவளவன் அங்கேயே சுற்றிசுற்றி வருகிறார். தே.மு.தி.க.,பொருளாளர் பிரேமலதா, விருத்தாசலத்தில் போட்டியிடுவதால், தம்மால் மற்ற எந்த தொகுதிக்கும் வரமுடியாது என, முதலிலேயே தெரிவித்து விட்டார்.

இப்படி வட மாவட்டங்களில் வாழும் கட்சி தலைவர்கள் அங்கேயே முடங்கிக் கொண்டதால், அவர்களது தென் மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிதி எதுவும் கைக்கு வராமல், மாற்று கட்சியினரை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. 'கட்சி நடத்துவதே தேர்தல் நேரத்தில் கவனிப்பதற்கு தான். இப்படி தலைவர்கள் தென் மாவட்டங்களுக்கு வராமல் போனால், எங்கள் கதி என்னாவது?' என, புலம்புகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)