விக்கிரவாண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., திடீர் மரணம்
விக்கிரவாண்டி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது திடீர் மறைவு தி.மு.க., வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக இருந்தவர், புகழேந்தி. இவர், கடந்த 2019ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார். தொடர்ந்து, 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இதே தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார்.
'விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட அன்னியூரில் அரசு கலைக்கல்லூரியை கொண்டு வர வேண்டும்' என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை சட்டசபையில் முன்வைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் விழுப்புரம் வேட்பாளர் ரவிக்குமார், கடலூர் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது மேடையின் அருகில் இருந்த ஓர் அறையில் இருந்தவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
அதே இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார். தொடர்ந்து முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து