நோ பிரியாணி, குவார்ட்டர்: காத்தாடும் பொதுக்கூட்டங்கள்

பொதுவாக அ.தி.மு.க., - தி.மு.க., நடத்தும் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பங்கேற்பர். சமீப காலமாக அ.தி.மு.க., மாவட்ட அளவில் கூட்டங்கள் நடத்துவதாக தெரியவில்லை. தி.மு.க., கூட்டம் நடத்துகிறது.
ஆனால், அந்த பொதுக்கூட்டங்களில் அதிக மக்கள் கூட்டத்தை காண முடியவில்லை. இதனால் காலி சேர்கள் தான் கண்ணுக்கெட்டிய துாரம் வரை தெரிகின்றன. சமீபத்தில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சாத்துாரில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்திற்கு மக்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே பங்கேற்றனர். அதே நிலைதான் திண்டுக்கல்லில் கனிமொழி கூட்டத்திற்கும் இருந்தது.
இது குறித்த கட்சியினர் கூறுகையில், பொதுவாக பொதுக்கூட்டங்களுக்கு பணம், குவார்ட்டர், பிரியாணி கொடுத்து தான் மக்களை அழைத்து வருவர். தற்போது பொதுக்கூட்டங்களுக்கு காசு கொடுத்து ஆட்களைக் கூட்டி வரவேண்டாம். கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும்பங்கேற்றால் போதுமானது என தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இதனால் தி.மு.க., கூட்டங்களுக்கு அதிகளவில் மக்களை காண முடிவதில்லை. தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் இனி தலைவர்கள் வரும் போது கூலியாட்களுக்கு வேலை வந்து விடும்என்றனர்.
வாசகர் கருத்து