இரவில் 'திடீர்' மின் தடை பணப்பட்டுவாடா 'ஜரூர்'
லோக்சபா தேர்தல் பிரசாரம் நடந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக நகர் மற்றும் கிராம பகுதிகளில், இரவு, 11:00 மணிக்கு மேல் அதிகாலை, 3:00க்குள் 'திடீரென' மின்தடை செய்யப்படுகிறது. மின் தடை ஏற்படும், 10 முதல் 20 நிமிடங்களுக்குள், பணப்பட்டுவாடா ஜரூராக நடக்கிறது.
குறிப்பாக 10 வீடுகளுக்கு, இருவர் வீதம் நியமித்து ஓட்டுக்கு, 500 முதல், 1,000 ரூபாய் வழங்குகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க, வருமான வரித்துறையின் கெடுபிடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால், ஆளும் கட்சியினர், கடந்த சில நாட்களாக மின் தடை ஏற்படுத்தி, பணப்பட்டுவாடாவை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஞாயிற்று கிழமைக்குள் பணப்பட்டுவாடாவை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'மின் வினியோகம் தொடர்பான பிரச்னைகளில், ஏதேனும் சில இடங்களில் மின் தடை செய்திருக்கலாம். அரசியல் கட்சியினருக்காக, மின் தடை செய்வதில்லை. அவ்வாறு மின்வாரிய அலுவலர்கள், செய்வதாக புகார் வந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து