சந்திரசேகர ராவ் மகள் கவிதா கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். முன்னதாக, 2021-22ம் ஆண்டில் டில்லி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இதில், சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்புள்ளதாக கூறி, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்தபோது பி.ஆர்.எஸ் கட்சித் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. முடிவில், கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் அவர் டில்லி அழைத்துச் செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து