ஆ.ராசா காரை ஏன் சோதனை செய்யவில்லை: பெண் அதிகாரி மீது பாய்ந்த நடவடிக்கை
நீலகிரி தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா சென்ற காரை சரியாக சோதனை செய்யாத காரணத்தால், தேர்தல் பறக்கும் படை பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
லோகசபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடப்பதால் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் கமிஷன் சார்பில் மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கார், லாரி என அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. இதற்கிடையே, கடந்த 25ம் தேதி நீலகிரி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசாவின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா சோதனை மேற்கொண்டார்.
ஆனால், முறையாக சோதனை செய்யாமல் அந்தக் காரை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா தலைமையில் விசாரிக்குமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
விசாரனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கீதா சரிவர சோதனை நடத்தாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கீதாவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
வாசகர் கருத்து