வாரிசு அரசியலில் உடன்பாடு இல்லை: சகோதர உறவை துண்டித்த மம்தா
லோக்சபா தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில், சகோதரர் உடனான உறவை துண்டித்துவிட்டதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
திரிணமுல் காங்கிரசின் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை சில நாள்களுக்கு முன்பு மம்தா அறிவித்தார். இதில், ஹவுரா தொகுதியின் வேட்பாளராக பிரசுன் பானர்ஜி அறிவிக்கப்பட்டார். இவர், இந்த தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர்.
இந்த அறிவிப்பை எதிர்த்த மம்தாவின் சகோதரர் பாபன், "ஹவுரா தொகுதிக்கு பிரசுன் பானர்ஜி சரியானவர் அல்ல. அந்த தொகுதியில் திறமையான வேட்பாளர்கள் பலர் உள்ளனர். என்னுடைய இந்த கருத்துக்கு மம்தா உடன்பட போவதில்லை. அதேநேரம், ஹவுராவில் சுயேச்சையாக போட்டியிடவும் தயங்க மாட்டேன்" என்றார்.
இந்தக் கருத்தால் கடும் கோபமடைந்துள்ள மம்தா பானர்ஜி, சகோதரர் உடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்துள்ள பேட்டியில், "ஒவ்வொரு தேர்தலின் போதும் பாபன் எதாவது ஒரு பிரச்னையை உருவாக்குகிறார். வாரிசு அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. பாபன் உடனான உறவை, நானும் எனது குடும்பமும் முறித்துக் கொள்கிறோம்' என்றார்.
இந்தப் பேட்டியை எதிர்பார்க்காத போபன், "கட்சி வேட்பாளரை எதிர்த்து நான் எதுவும் சொல்ல முடியாது. மம்தாவின் ஆசிர்வாதமே எனக்கு போதும்" என மன்னிப்பு கோரியுள்ளார்.
வாசகர் கருத்து