'உப்பு போட்ட சோறு மோடிக்கு வேணுமா ஓட்டு?'
ஆவடி அடுத்த திருநின்றவூரில், எம்.எல் ஏ., நாசர் தலைமையில் ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் தமிழக அரசு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.
இதில் நாசர் பேசியதாவது:
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் அதை குறைக்காமல் வாயில் வடை சுடுகிறார். ஆண்டுக்கு, 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்.கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் யாருக்கு வேலை கொடுத்தார்.
உப்பு போட்டு சோறு உண்ணும் நாம், மோடிக்கு ஓட்டு போடவில்லை. இனியும் ஓட்டு போட மாட்டோம். வட மாநிலத்தான் போட்டான். அவருக்கு ஓட்டு போட்ட வடமாநிலத்தான் இங்கு வடையும், பக்கோடாவும் விற்கிறான். பக்கோடா விற்கவா வடமாநிலத்தான் மோடிக்கு ஓட்டு போட்டான்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து