பா.ஜ., போட்டியிட்ட 19ல் 10 தொகுதிகளில் டெபாசிட் "அவுட்"
சென்னை: தமிழகத்தில் பா.ஜ., நேரடியாக போட்டியிட்ட 19 தொகுதிகளில், வடசென்னை,
திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.
திமுக கூட்டணியை எதிர்த்து பா.ம.க.,, அ.ம.மு.க.,, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, தேவேந்திர யாதவ்வின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து பா.ஜ., தேர்தலை எதிர்கொண்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் பா.ஜ., சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் பலா பழ சின்னத்தில் தனித்து போட்டியிட்டார்.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி கட்சிகள் களம் இறங்கின. மீதமுள்ள 19 தொகுதிகளில் பா.ஜ., நேரடியாக போட்டியிட்டது. 19 தொகுதிகள் 10 தொகுதிகளில் பா.ஜ., டெபாசிட் இழந்துள்ளது.
பா.ஜ., டெபாசிட்டை இழந்த தொகுதிகள்
1. வடசென்னை- பால்கனகராஜ்,
2. சிதம்பரம்- கார்த்தியாயினி,
3. கரூர்- செந்தில்நாதன்,
4. நாகை- ரமேஷ்,
5. நாமக்கல்- கே.பி.ராமலிங்கம்,
6. தஞ்சாவூர்- எம்.முருகானந்தம்,
7. திருப்பூர்- ஏ.பி.முருகானந்தம்,
8. திருவள்ளூர்- பொன்.பாலகணபதி,
9. திருவண்ணாமலை- அஸ்வத்தாமன்,
10. விருதுநகர்- ராதிகா சரத்குமார்,
வாசகர் கருத்து