தி.மு.க., - பா.ஜ., இடையே தான் போட்டி : ப.சிதம்பரம்

"அ.தி.மு.க., ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட, லோக்சபாவில் கடைசி வரிசையில் கடைசி இடத்தில் அமர வைக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு தருவார்கள்" என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பேசியதாவது:

இந்த தேர்தலில் தி.மு.க.,கூட்டணிக்கும், பா.ஜ., கூட்டணிக்கும் மட்டுமே போட்டி உள்ளது. ஆகவே, அ.தி.மு.க.,வுக்கு வேலை இல்லை. அ.தி.மு.க., வேட்பாளர்கள் ஏன் தேவையில்லாமல் பிரசாரத்திற்கு செல்கின்றனர்?

அப்படியே அ.தி.மு.க., ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் கூட, லோக்சபாவில் கடைசி வரிசையில் கடைசி இடத்தில் அமர வைக்கப்பட்டு, 2 நிமிடங்கள் மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு தருவார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த காங்., ஆட்சி வேண்டுமா, அல்லது 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பா.ஜ., ஆட்சி மீண்டும் தொடர வேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்யட்டும். ஆனால், வாக்காளர்கள் அ.தி.மு.க.,வை ஒதுக்கி வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.


Bala - Bangalore, இந்தியா
12-ஏப்-2024 17:23 Report Abuse
Bala சிதம்பரம் இந்த விஷயத்தில் சரியாக சொல்கிறார். அதிமுக ஒரு உப்புக்கு சப்பாணி.