' எம்.ஜி.ஆர்., - ஜெ., படங்களை பா.ஜ., பயன்படுத்த கூடாது'
அ.தி.மு.க., இலக்கிய அணி செயலரும், செய்தி தொடர்பாளருமான வைகைச்செல்வன் கூறியதாவது:
அ.தி.மு.க., தலைவர்களான எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா படங்களை போஸ்டர், பேனர்களில் அச்சிட்டு, புதுச்சேரியில் பா.ஜ.,வினர் ஓட்டு கேட்கின்றனர்.
இதை, அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது. இரு தலைவர்களின் படங்களையும், போஸ்டர், பேனர்களில் பயன்படுத்த அ.தி.மு.க.,வுக்கு தான் முழு உரிமை உள்ளது; பா.ஜ.,வுக்கு எந்த உரிமையும் கிடையாது.
தி.மு.க., கூட்டணியில், காங்., 1.4., ம.தி. 4.., ம.நீ.ம., ஆகிய கட்சிகள் எந்த சின்னங்களில் போட்டியிடுவது என்பது குறித்த பேச்சில் பிரச்னை உள்ளது. அதனால் தான், காங்கிரசை நாங்கள் அழைத்தோம்.
இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் சொந்தம் என நீதிமன்றங்களும், தேர்தல் கமிஷனும் கூறியுள்ளன. வரும் லோக்சபா தேர்தலில், எங்கள் தலைமையிலான கூட் டணி அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து