சிட்டிங் தொகுதிகள் மாறலாம்: செல்வப்பெருந்தகை
" கடந்த முறை போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம்" என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
செல்வப்பெருந்தகை கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் இம்முறையும் போட்டியிடுவோம். சில தொகுதிகள் மட்டும் மாற வாய்ப்பு உள்ளது.
தி.மு.க.,வுடன் தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்னும் இரண்டு நாளில் தெரியவரும். வரும் தேர்தலில் புது முகங்கள் போட்டியிடுவது குறித்த முடிவை தேசிய தலைமை முடிவு செய்யும்.
தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிக்கொண்டே செல்கிறது. இதனை பற்றி பிரதமருக்கு எந்த கவலையும் இல்லை. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் தேர்தல் நடக்க வேண்டும்.
தமிழகத்துக்கு அடிக்கடி பிரதமர் வருகிறார். ஆனால், தமிழகத்திற்கு செய்த திட்டங்களை பற்றி மட்டும் அவர் ஏன் குறிப்பிடுவதில்லை. தான் கொண்டு வந்த திட்டங்களை பற்றி முதல்வர் ஸ்டாலின் வெளிப்படையாக பேசுகிறார்.மத்திய அரசு, தமிழகத்திற்கு என்ன செய்தது என்பதை பட்டியலிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து