தி.மு.க., - கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: முழு விவரம்
லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை தி.மு.க., முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில் உள்ள முஸ்லீம் லீக், கொ.ம.தே.க, இ.கம்யூ, மா.கம்யூ, வி.சி., ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தி.மு.க., மற்றும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
அதன்படி, தி.மு.க., நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் பின்வருமாறு:
வடசென்னைதென் சென்னைமத்திய சென்னைஸ்ரீபெரும்புதூர்காஞ்சிபுரம் (தனி)அரக்கோணம் வேலூர்தருமபுரி திருவண்ணாமலை ஆரணி கள்ளக்குறிச்சிசேலம்ஈரோடு நீலகிரி (தனி) கோவைபொள்ளாச்சி பெரம்பலூர் தஞ்சாவூர்தேனிதூத்துக்குடிதென்காசி (தனி)
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:-
திருவள்ளூர் (தனி)கடலூர்மயிலாடுதுறைசிவகங்கைதிருநெல்வேலிகிருஷ்ணகிரிகரூர்விருதுநகர்கன்னியாகுமரிபுதுச்சேரி
வி.சி., போட்டியிடும் தொகுதிகள்:-
விழுப்புரம் (தனி)சிதம்பரம் (தனி)
இ.கம்யூ., போட்டியிடும் தொகுதிகள்:
நாகப்பட்டினம் (தனி)திருப்பூர்
மா.கம்யூ., போட்டியிடும் தொகுதிகள்:-
மதுரைதிண்டுக்கல்
முஸ்லிம் லீக்
ராமநாதபுரம்
ம.தி.மு.க.
திருச்சி
கொங்கு மக்கள் தேசிய கட்சி:
நாமக்கல் (உதயசூரியன் சின்னம்)
வாசகர் கருத்து