41 கட்சிகளை சேர்ந்தவர்கள் எம்.பி.,க்களாக தேர்வு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவின்படி 41 அரசியல்கட்சியை சேர்ந்தவர்கள் எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 5 அரசியல் கட்சிகள் பார்லி.,க்கு செல்கிறது.
தேசிய தேர்தல் சீர்திருத்த அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி இது குறித்த மேலும் விவரங்கள் வருமாறு:
சமீபத்திய 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், மொத்தம் 543 தொகுதிகளில் தேசிய கட்சிகள் சார்பில் 346 எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளனர். இது மொத்தத்தில் 64 சதவீதம். மாநில கட்சிகள் சார்பில் 179 எம்.பி.,க்கள் தேர்வாகி உள்ளனர். இது மொத்தத்தில் 33 சதவீதம் ஆகும். அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சார்பில் 11 எம்.பி.,க்கள் மற்றும் சுயேச்சை மூலம் 8 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் உயர்வு
இதுபோல் இந்த தேர்தலில் பங்கேற்ற அரசியல் கட்சிகள் எண்ணிக்கையும், கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளது. கடந்த 2009ல் 368 அரசியல்கட்சிகள், 2014 ல் 464 அரசியல் கட்சிகள், 2019 ல் 677 கட்சிகள் பங்கேற்றன. தற்போது 2024ல் 751 அரசியல் கட்சிகள் தேர்தலில் பங்கெடுத்துள்ளன.
240 தொகுதிகளை பிடித்து பா.ஜ., பெரிய கட்சியாகவும், காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை பிடித்து இரண்டாவது பெரிய கட்சியாகவும், 33 தொகுதிகளை பிடித்து சமாஜ்வாதி கட்சி 3 வது பெரிய கட்சியாகவும் உயர்ந்துள்ளது.
வாசகர் கருத்து