மஹா., துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பட்னாவிஸ் விருப்பம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: மஹாராஷ்டிராவில் தோல்விக்கு பொறுப்பு ஏற்று துணை முதல்வர் பதவியில் இருந்து விலக பா.ஜ.,வின் தேவேந்திர பட்னாவிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
2019 லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்த பா.ஜ.,வுக்கு 2024 ல் நடந்த தேர்தலில் 9 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று பதவி விலக, அம்மாநில துணை முதல்வர் பட்னாவிஸ் முன்வந்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக பா.ஜ.,வின் பட்னாவிஸ் உள்ளார். லோக்சபா தேர்தலில், மஹாராஷ்டிராவில் பா.ஜ., 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இக்கட்சி 23 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இதனையடுத்து பட்னாவிஸ் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பட்னாவிஸ் கூறியதாவது: அரசு பொறுப்புகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் எனவும், வெளியில் இருந்து கட்சி பணிகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும் என கட்சி தலைமையை கேட்டுக் கொள்கிறேன். விரைவில் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளேன். இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.
வாசகர் கருத்து