மதுரையில் ஓட்டு எண்ணிக்கை தயார் நிலையில் 716 பேர்
மதுரை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.19ல் நடந்தது. மதுரை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் மருத்துவக்கல்லுாரியில் நடக்கிறது.
லோக்சபா தொகுதியின் கீழ் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனி அறைகளில் தலா 14 மேஜைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர், ஒரு மைக்ரோ அப்சர்வர் இருந்து ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவர்.
மதுரை தொகுதியில் இப்பணியில் ஈடுபட 604 பேரும், 112 மைக்ரோ அப்சர்வர்களும் தயார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி மே 24ல் நடந்தது.
ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 5 வி.வி.பேட்களில் உள்ள சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. அதற்கான பாக்ஸ்களும் தயாராக உள்ளன. தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகளுக்கான தபால் ஓட்டுகள் பல வாரங்களுக்கு முன்பே வந்து சேர்ந்துவிட்டன.
மதுரை மாவட்டத்தில் 1027 சர்வீஸ் ஓட்டுகள் (ராணுவ வீரர்களுக்கானது) உள்ளது. இவர்களில் 979 பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். இவர்களின் 482 ஓட்டுகள் இதுவரை வந்து சேர்ந்துள்ளன. தினமும் 5 அல்லது 10 ஓட்டுகள் தபாலில் வந்து சேர்கின்றன. ஜூன் 4 வரை இந்த ஓட்டுக்களை பெற்று எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்வர்.
வாசகர் கருத்து