நான் யாருடனும் பேசவில்லை : சரத்பவார் மறுப்பு
புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பீஹார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ள சந்திரபாபு நாயுடு உடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை மறுத்த சரத்பவார், யாருடனும் பேசவில்லை எனக்கூறியுள்ளார்.
@1br@@ லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளுக்கு மேல் முன்னணியில் இருக்கிறது. இதில் பா.ஜ., மட்டும் 241 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பா.ஜ., இந்த முறை கூட்டணி தயவில் மட்டுமே ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது.
பீஹாரில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களில் வென்றுள்ளார், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
நிதீஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உடன், சரத்பவார் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனை சரத்பவார் மறுத்துள்ளார். நான் யாருடனும் பேசவில்லை எனக்கூறியுள்ளார்.
வாசகர் கருத்து