வாக்காளரை 'கவனிக்க' மறுப்பு காங்., - தி.மு.க., பஞ்சாயத்து
வாக்காளர்களை, 'கவனிக்க' முடியாது எனதிருவள்ளூர் காங்., வேட்பாளர் கைவிரித்துள்ளதால்,பஞ்சாயத்து நடந்து வருகிறது.
திருவள்ளூர் தனித்தொகுதியில் தி.மு.க., கூட்டணி வேட்பாளராக காங்., கட்சியை சேர்ந்த சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. கூட்டணி கட்சியினருடன் முரண்டு பிடிப்பதால், தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் பட்டும் படாமலும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேநேரத்தில், கூட்டணி பலத்தால் தனது வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் சசிகாந்த் செந்தில் உள்ளார்.
இருந்தபோதும், பல தொகுதிகளையும்போல், தி.மு.க., கூட்டணி சார்பில் வாக்காளர்களை கவனிக்கும் திட்டம் திருவள்ளூரிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கென 'பூத்' வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆனால், தன்னால் வாக்காளர்களை 'கவனிக்க' இயலாது என்று கூறி சசிகாந்த், கைவிரித்துள்ளார். இது தி.மு.க., தலைமை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதையடுத்து, தி.மு.க., தரப்பில் வழக்கறிஞர் அணியை சேர்ந்த கிரிதரன், தொகுதிக்கு சென்று தி.மு.க., மற்றும் காங்., நிர்வாகிகள் முன்னிலையில் பஞ்சாயத்து பேசியுள்ளார்.
அப்போது, பூத் செலவிற்கு மட்டுமே தன்னால் பணம் வழங்க முடியும் என்று சசிகாந்த் கறாராக கூறியுள்ளார். இப்பிரச்னையை தமிழக காங்., தலைமை கவனத்திற்கு தி.மு.க.,வினர் கொண்டு சென்றுள்ளனர்.
வாசகர் கருத்து