வாகன தணிக்கையில் சிக்கிய ரூ.173 கோடி: சத்யபிரதா சாஹு தகவல்

"வாக்காளர் அடையா அட்டை இல்லாதவர்கள் 13 வகையான ஆணவங்களின் வாயிலாக ஓட்டுப் போடலாம்" என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாஹு கூறியதாவது:

தமிழகத்தில் 68,321 ஓட்டுச் சாவடிகளில் 8,050 ஓட்டுச் சாவடிகள் பதற்றமானவையாக உள்ளன. அதிலும், மிக பதற்றமான ஓட்டுச் சாவடியாக 183 உள்ளன.

நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்குகிறது. மாலை 6 மணியளவில் வரிசையில் நிற்கும் அனைவரும் ஓட்டுப் போடலாம். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தமிழகத்தில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 10.92 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர்.

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள் 6.23 கோடி பேர் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் ஆதார் கார்டு உள்பட 13 வகையான ஆவணங்களைக் கொண்டு ஓட்டு போடலாம்.

தற்போது வரையில் சிவிஜில் மூலம் 4,861 புகார்கள் வந்தன. அதில் 22 புகார்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. மற்ற புகார்கள் அனைத்தும் தீர்வு காணப்பட்டுவிட்டன. வாகன தணிக்கையின் மூலம் 173 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப் பதிவு நாளில் 1.3 லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

தேர்தல் பணிகளுக்காக 1,58,568 ஓட்டுப் பதிவு இயந்திரங்களும் 81,157 கன்ட்ரோல் யூனிட்டுகளும் 86,858 விவிபேடுகளும் பயன்படுத்தப்பட உள்ளன. வெப் கேஸ்டிங் முறையில் 44,800 ஓட்டுச் சாவடிகள் நேரடியாக கண்காணிக்கப்பட உள்ளன.

தேர்தலில் 85வயதுக்கு மேற்பட்டோரின் வீடுகளுக்கே சென்று 67,175 ஓட்டுகள் பெறப்பட்டன. மாற்றுத் திறனாளிகளிடம் 41,628 ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைத்து வரும் வகையில் இலவச வாகனங்கள் இயக்கப்பட உள்ளன. இலவச வாகனங்களுக்கு 1950 என்ற எண்ணில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்