ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு
மூணாறு: இடுக்கி லோக்சபா தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் ஏற்பாடுகளை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அதிலாஅப்துல்லா ஆய்வு செய்தார்.
கேரளாவில் லோக்சபா தேர்தல் 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்.26ல் நடந்தது.
இடுக்கி லோக்சபா தொகுதி ஏழு சட்டசபை தொகுதிகளைக் கொண்டதாகும். லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் இடுக்கி அருகே பைனாவில் அரசு மாதிரி உண்டு, உறைவிட பள்ளியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
அதனை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அதிலாஅப்துல்லா நேரில் ஆய்வு நடத்தினார்.
மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷீபாஜார்ஜ், எஸ்.பி. விஷ்ணுபிரதீப், சப் கலெக்டர்கள் அருண் எஸ். நாயர், ஜெயகிருஷ்ணன், ஏ.எஸ்.பி. கிருஷ்ணகுமார், மூவாற்றுபுழா ஆர்.டி. ஓ., ஷைஜூ பி. ஜேக்கப், தேர்தல் பிரிவு கூடுதல் கலெக்டர் அருண் உள்பட உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து