ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அலுவலர்கள் அதிகாலை வரவேண்டும் தேர்தல் பயிற்சியில் அறிவுரை
தேனி: ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்கள் மையத்திற்கு அதிகாலை 5:30 மணிக்கு வரவேண்டும் என பயிற்சியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. தேனி தொகுதியில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்கம் கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என வேட்பாளர்கள், முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், நுண்மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டு எண்ணிக்கையில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி, சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஜூன் 4 அன்று ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு அதிகாலை 5:00 மணி முதல் 5:30 மணிக்குள் வர வேண்டும். தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள அடையாள அட்டை அட்டை மட்டும் கொண்டு வர வேண்டும். வருகை பதிவிற்கு பின் எந்த மேஜையில் பணிபுரிய உள்ளனர் என குலுக்கல் நடைபெற்று அதற்காகன ஆணை வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை துவங்கும் என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து