தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு கண்காணிப்பாளர், உதவியாளர் தேர்வு
தேனி, : தேனி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் பணியாற்ற உள்ள கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கம்யூட்டரில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்.,19ல் நடந்தது. தேனி தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேனி தொகுதியில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம், உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் உள்ளன.
இத்தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்க கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4ல் நடக்கிறது.
இதில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்துள்ளது.
இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், உதவியாளர் தேர்வு செய்யும் பணி கம்யூட்டர் குலுக்கல் முறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது.
ஓட்டு எண்ணிக்கையில் பணிபுரிய உள்ள 306 பேர் கண்காணிப்பாளர், எண்ணிக்கை உதவியாளர், நுண் மேற்பார்வையாளர்கள் பிரிக்கப்பட்டனர். அதற்கான பணி ஆணை தேர்தல் பிரிவு மூலம் அனுப்பபட்டது.
இரண்டாம் கட்ட குலுக்கலில் யார் எந்த தொகுயில் பணிபுரிய உள்ளனர் என்றும், ஜூன் 4 காலை நடைபெறும் குலுக்களில் எந்த மேஜையில் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து