கருத்துக்கணிப்புகளை தவிடு பொடியாக்கிய தேர்தல் முடிவுகள்
சென்னை: ஜூன் 1ம் தேதி வெளியாகிய அனைத்து கருத்துக் கணிப்புகளை, இன்றைய தேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ., அமோக வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு அனைத்து கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.,வுக்கு சாதகமாகவே அமைந்தது. பா.ஜ., தனி மெஜாரிட்டி உடன் ஆட்சி அமைக்கும், பா.ஜ., கூட்டணிக்கு 370க்கும் மேல் கிடைக்கும் என அனைத்து ஊடகங்களும் தெரிவித்தன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‛ இண்டியா ' கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக்கூறியிருந்தது.
இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், கருத்துக்கணிப்புகள் முடிவு அனைத்தும் தவிடு பொடியாகியது. துவக்கத்தில் பா.ஜ., முன்னிலை பெற்றாலும் நேரம் செல்ல செல்ல, பா.ஜ., பின்னடைவைச் சந்தித்தது. அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சியின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்தியில் பாஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ள போதிலும், தனி மெஜாரிட்டி கிடைக்காதது அக்கட்சி தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து